#Pushpa2Update | வெளியீடு தேதி குறித்து அப்டேட் கொடுத்த படக்குழு!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா – 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு உறுதி செய்துள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ம்…

Pushpa2 the rule, Pushpa2, allu arjun, rahadh faasil, pushpa

நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா – 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு உறுதி செய்துள்ளது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. கிட்டத்தட்ட ரூ. 350 கோடி மேல் இந்த திரைப்படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து, இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்திற்கு ‘புஷ்பா 2 தி ரூல்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள் : பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளை நுரை! தோல் தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

முன்னதாக இத்திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், படத்தின் இறுதி கட்டப் பணிகள் முடிவடையாததால், திரைப்படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் மாற்றியுள்ளனர். அதன்படி, டிசம்பர் 5ம் தேதி இந்த திரைப்படம் உலகளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.