ஓடிடியில் வெளியானது #KozhipannaiChelladurai

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர்…

SeenuRamasamy ,YogiBabu ,KozhipannaiChelladurai ,Movie ,OTTRelease

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் தற்போது ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளை நுரை! தோல் தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். கிராமத்து கதைக்களத்தில் அண்ணன் – தங்கை உறவைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் வெளியீட்டு முன்பாகவே, ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ் திரைப்படம் என்கிற பெயரையும் இத்திரைப்படம் பெற்றது. இந்நிலையில், ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம் சிம்பிளி சௌத் ஓடிடியில் இன்று வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.