முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பெரும்பான்மையை நிரூபிக்க முன்வந்த ஆம் ஆத்மி…அனுமதி மறுத்த ஆளுநர்….

பஞ்சாப் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டுவதற்கு  பிறப்பித்த உத்தரவை அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திரும்பப்பெற்றுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக முயல்வதாகவும் தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசுவதாகவும் குற்றம்சாட்டிய அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தாமாக முன்வந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்குகோரினார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களின் நேர்மையை நிரூபிப்பதற்காக இதனைச் செய்வதாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், சட்டப்பேரவையில் தமது அரசுக்குள்ள பெரும்பான்மையை நிரூபித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆம் ஆத்மி ஆளும் மற்றொரு மாநிலமான பஞ்சாபிலும் பாஜக மீது ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டை ஆம் ஆத்மி தலைவர்கள் எழுப்பினர்.  தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களிடம் தலா 25 கோடி ரூபாய் வரை தருவதாக கூறி பாஜகவினர் பேரம் பேசுவதாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டினார். இந்நிலையில் டெல்லி பாணியில் தாமாக முன்வந்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் முயற்சி எடுத்தார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் யாரும் பாஜக பக்கம் தாவவில்லை என்பதை நிரூபிக்க சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்குகோர உள்ளதாக அவர் கூறினார்.

பஞ்சாப் முதல்வரின் கோரிக்கையை ஏற்று வரும் 22ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார். இந்நிலையில் அந்த உத்தரவை அவர் தற்போது திரும்பப்பெற்றுள்ளார். பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக மட்டும் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட பஞ்சாப் சட்டப்பேரவை விதிகளில் இடமில்லை என சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பிரதாப் சிங் பஜ்வா உள்ளிட்டவர்கள் அளித்த புகார் குறித்து சட்ட வல்லுநர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. சட்டவல்லுநர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், 22ந்தேதி சிறப்புக் கூட்டத் தொடரை கூட்ட ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ஆளுநர் திரும்பப் பெற்றுள்ளதாகவும் பஞ்சாப் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பஞ்சாப் ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவை ஆளுநர் எப்படி மறுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஆபரேசன் லோட்டஸ் திட்டம் தோல்வி அடைந்துவிடும் என்று தெரிந்தவுடன் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதற்கான உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர் தேவைப்படாது! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Gayathri Venkatesan

’மெட் ஆல்’ ஆய்வக கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து!

Halley Karthik

உயர்நீதிமன்ற உத்தரவு; 2 நாளில் வழங்கப்பட்ட சாதி, மதமற்றவர் சான்றிதழ்

EZHILARASAN D