அருப்புக்கோட்டையில் கோயில் திருத்தேர் வீதி உலா – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!

அருப்புக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற புளியம்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் திருத்தேர் வீதி உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். விருதுநகர்…

அருப்புக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற புளியம்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் திருத்தேர் வீதி உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில் இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா இன்று நடைபெற்றது.

திருத்தேர் வீதி உலாவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திருத்தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். தேரில் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மனை கோவிலில் இருந்து துவங்கி விருதுநகர் ரோடு, காந்தி மைதானம், வேலாயுதபுரம் உள்ளிட்ட வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் வந்தடைந்தது.

—-அனகா காளமேகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.