புதுக்கோட்டையில் பிடிபட்ட அரியவகை நட்சத்திர ஆமை!

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பி.யு. சின்னப்பா தெரு பகுதியில் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்றை அப்பகுதி மக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்படைத்தனர். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பி.யு. சின்னப்பா தெருவில் ஷாஜகான் என்பவர் வீட்டின் வாசலில்…

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பி.யு. சின்னப்பா தெரு பகுதியில் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்றை அப்பகுதி மக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் 
ஒப்படைப்படைத்தனர்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பி.யு. சின்னப்பா தெருவில் ஷாஜகான் என்பவர்
வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த பொழுது வீட்டின் அருகே உள்ள வாய்க்கால் மேலே ஏதோ ஒன்று ஊர்ந்து வருவது போல் தெரிந்துள்ளது.

இதனை அடுத்து ஷாஜகான் அதன் அருகே சென்று பார்த்த பொழுது அது அரிய வகை நட்சத்திர ஆமை என்பதும் தெரியவந்தது.  இதனை அடுத்து அந்த ஆமையைப் பிடித்து ஒரு வாளியில் வைத்துள்ளனர்.

பின்னர் புதுக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் அருகே உள்ள பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் அரிய வகை நட்சத்திர ஆமையை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

இதனை அடுத்து அங்கு வந்த வனத்துறையினர் அரிய வகை நட்சத்திர ஆமையை வாங்கி சென்று வனப்பகுதியில் உள்ள குளத்தில் விட்டுச் சென்றனர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.