புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 5வது நாளாக வேலை நிறுத்தம்!

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் 5-ஆவது நாளாக தொடர்கிறது. புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தாக்கியதால்…

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் 5-ஆவது நாளாக தொடர்கிறது.

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தாக்கியதால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் இதுவரை 12 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

முதல்வருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து போராட்டம் தொடர்ந்து வருகிறது. பணிப் பாதுகாப்பு இல்லை மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியிலிருந்து நீக்கப்பட்ட 12 ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, கிராமப்புற மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.