விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்களைக் கைது செய்த காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மற்றும் மதுரை மாவட்டங்களின் வனப்பகுதியில் பெரும்பாலான இடங்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் ஆகிய இரண்டு சரணாலயப் பகுதிகளில் அமைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அடர்த்தியான வனப்பகுதி கொண்ட இந்த சரணாலயப் பகுதிகளில் போதை வஸ்து பொருளான கஞ்சா சற்று அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. போதை வஸ்துக்களை, குறிப்பாகக் கஞ்சா உள்ளிட்டவற்றைத் தடை செய்வதற்காக பல்வேறு சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் மலையடிவார கிராமங்களில் சிறப்புக் காவல் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்ட போது கே.தொட்டிய பட்டி பகுதியில் முறைகேடாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து சிறப்புக்காவல் படையினர், இதனைப் பதுக்கி வைத்திருந்த சிவகுமார், சந்தானம், வெங்கடேஷ் குமார் உள்ளிட்ட மூவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், அவர்களிடம் இருந்து, ஒரு கார் உட்பட இரண்டு நான்கு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இந்த கஞ்சா வியாபாரத்தில் மேலும் பலர் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.