சிசுக்கொலையை தடுக்க தனிக்குழு-மதுரை ஆட்சியர்

சமீபத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், பெண் சிசுக்கொலையை தடுக்க தனிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளதாவது, மதுரை மாவட்டத்தில்…

சமீபத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், பெண் சிசுக்கொலையை தடுக்க தனிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளதாவது, மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக்கொலையை தடுக்கும் விதமாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்புத்துறை, காவல்துறை, சமூகநலத்துறை, சமூகப்பாதுகாப்புத்துறை (மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு), ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட 10 குழுக்களை கொண்டு புதிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இக்குழு கால முறையில் கூடி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து பணிகளை மேற்கொள்ளும். மேலும் சிசுக்கொலைகள் தொடர்பாக சட்டப்படியாக நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் அதற்கான விழிப்புணர்வு கடுமையான நடவடிக்கைகள் ஏற்படுத்தவும், குழந்தைகள் மீட்கப்படும் தருணங்களில் மறுவாழ்வு குறித்த முக்கிய பணிகளையும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் குடும்பத்தில் இருக்கும் பொழுது வறுமை, போதிய கல்வியறிவின்மை, ஆகியவைகள் சிசு கொலைகள் நடைபெறுவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றது.

குழந்தைகளை பராமரிக்க முடியாத சூழ்நிலையில் பெற்றோர்கள் இருந்தால் ராஜாஜி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில், உள்ள தொட்டில்
குழந்தைகள் திட்டத்தில் குழந்தைகளை வழங்கலாம்.

இதன் அடிப்படையிலும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உறுதி செய்யப்படும். மேலும் குழந்தைகள் நலக்குழுவின் மூலமாக சிறப்பு தத்து வளமையங்களில் தங்க வைக்கப்பட்டு அரசு வழிகாட்டுதலுடன் தத்து வழங்கப்படும் என்றும் ஆட்சியர் கூறினார்.

மேலும் குழந்தைகள் மற்றும் சிசுக்கொலை மற்றும் கருக்கொலையினை தடுப்பது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.