புதுச்சேரியில் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் பிரமோற்சவ விழாவையொட்டி நடைபெற்ற விடையாற்றி உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலின் 63வது பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவத்தையொட்டி நாள்தோறும் காலை மற்றும் மாலை மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யபட்டு பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.
இந்நிலையில் மணக்குள விநாயகருக்கு விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர் தங்கத்தேரில் எழுந்தருளி உள்புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.







