மணவாள நல்லூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில், படுகாயமுற்ற திமுக பிரமுகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ தியாகராஜன் மகன் இளையராஜா திமுகவில் கட்சி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தமது நிலத்தில் இயற்கை விவசாயப்பணியில் இளையராஜா ஈடுபட்டு இருந்த போது, அதே ஊரை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல், கள்ள துப்பாக்கிகள் மூலம் சுட்டுக்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து காரில் தப்பிய போதிலும், இடுப்பு, கழுத்து பகுதிகளில் குண்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




