புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக- காங்கரஸ் கூட்டணியில் இருந்து மேலும் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரதாஜன் தலைமையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவுள்ள நிலையில் இன்று அடுத்தடுத்து இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளதால் நாராயணசாமி அரசுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் நாராயணன் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் இன்று ராஜினாமா செய்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய வெங்கடேசன், புதுச்சேரி அரசால், தட்டாஞ்சாவடி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. தொகுதிக்கு எதிவும் செய்ய முடியாத நிலையில் எப்படி ஓட்டு கேட்க முடியும் எனக் கேள்வியெழுப்பிய அவர் ராஜினாமா செய்தது கட்சி தலைமைக்கு தெரியாது எனத் தெரிவித்தார்.
புதுச்சேரியில் 33 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதில், காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகிய ஒரு எம்.எல்.ஏ-வுடன் சேர்த்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆறு பேர் பதவி விலகியிருக்கின்றனர். இதனால் அக்கட்சியின் மொத்த எண்ணிக்கை ஒன்பதாக குறைந்துள்ளது. அதேபோல் திமுகவில் இருந்து ஒரு எம்.எல்.ஏ விலகியதால் மொத்தம் இரண்டு உறுப்பினர்கள் மட்டும் உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் (என்.ஆர்.சி) ஏழு எம்.எல்.ஏ-க்களும் மூன்று நியமனம் எம்.எல்.ஏ-க்களும் உள்ளனர்.