புதுச்சேரி மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநில அரசு வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, பட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன பேரணியில் ஈடுபட்டனர். புதுச்சேரி பாமக மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் 500க்கும் மேற்பட்ட பட்டாளி மக்கள் கட்சியினர், அண்ணா சிலை அருகில் இருந்து புதுச்சேரி சட்டமன்றம் நோக்கி கண்டன பேரணி மேற்கொண்டனர்.
இந்நிலையில் சம்பா கோவில் அருகில் பேரணி வந்தவர்களை புதுச்சேரி காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது பேரணியில் ஈடுபட்டிருந்த பாமவினர், காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை தூக்கி எறிந்தும், அதன் மீது ஏறியும் சென்று, சட்டமன்ற வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காவல்துறையினர் தொடர்ந்து அவர்களை தடுக்க முயற்சித்தனர். ஆனால் காவல்துறையினரைத் தாண்டி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.







