முக்கியச் செய்திகள் கொரோனா

ஒமிக்ரான் தொற்றை விரட்டியடிக்க புதுச்சேரி அரசு தயார்; தமிழிசை சவுந்தரராஜன்

ஒமிக்ரான் தொற்றை விரட்டியடிக்க புதுச்சேரி அரசு தயார் நிலையில் இருப்பதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள, அம்பேத்கர் மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 70 சதவீதத்திற்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், ஒமிக்ரான் தொற்றை விரட்டியடிக்க புதுச்சேரி அரசு தயாராக உள்ளதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

‘புதுச்சேரி பொது சுகாதாரச் சட்டம், 1973 இன் பிரிவு 8 மற்றும் பிரிவு 54(1)ன் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் ஆக்கப்படுவதாகவும், தடுப்பூசி போடாதவர்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதை மீறி பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படிருந்த நிலையில்’, புதுச்சேரியில் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற உத்தரவு, தனி மனித உரிமையை மீறக்கூடாது என்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மனைவியை கேலி செய்ததால் தொகுப்பாளரை அறைந்த ஸ்மித்

Arivazhagan Chinnasamy

மதிமுக போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியானது!

Halley Karthik

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கு தலைவர் நியமனம்!

Gayathri Venkatesan