புதுச்சேரியில் ஜூன் 16 முதல் மின்கட்டணம் உயர்வு!

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் வரும் ஜூன் 16-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் திடீரென வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.25 முதல் ரூ.2.70…

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் வரும் ஜூன் 16-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் திடீரென வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.25 முதல் ரூ.2.70 வரையும், 101 முதல் 200 யூனிட்டுகளுக்கு 3.25 ரூபாயில் இருந்து 4 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 201 முதல் 300 யூனிட் வரை ரூ.5.40 ரூபாயில் இருந்து யூனிட்டுக்கு ரூ.6 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 301 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட்டிற்கு 6.80 ரூபாயில் இருந்து 7.50 ரூபாயாக மின் கட்டணம் உயர்த்தப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

வர்த்தக பயன்பாட்டில், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான கட்டணம் தற்போது யூனிட்டுக்கு 5.60 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட மின்கட்டணமானது நாளை மறுநாள் (ஜுன் 16) முதல் நடைமுறைக்கு வரும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. மின் கட்டண உயர்வு அறிவிப்பு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.