சரியான நேரத்தில் பணிக்கு வராததால் கட்டாய விடுப்பு – ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மாவட்ட ஆட்சியர்!

புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சரியான நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து அதிரடி உத்தரவிட்டார். புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும்…

புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சரியான நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து அதிரடி உத்தரவிட்டார்.

புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை என மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனை தொடர்ந்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் புதுச்சேரி நகராட்சி அலுவலகத்திற்கு திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலகத்தில் உள்ள ஊழியர்களின் வருகைப்பதிவேட்டை ஆராய்ந்த போது அதில் 50 சதவீத ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வராமல் இருப்பது கண்டறியப்பட்டது.

அதனை தொடர்ந்து அங்குள்ள அதிகாரிகளிடம் இனிமேல் பணிக்கு வரும் ஊழியர்களை கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு இன்று கட்டாய விடுப்பு அளித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதனால் நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கும் ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் அந்த அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் பணிக்கு வராத கண்காணிப்பாளருக்கு விடுப்பு அளித்து அவரை வேறு துறைக்கு மாற்ற உத்தரவிட்டார்.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.