புதுச்சேரி சட்டச்சபை; காங்கிரஸ்-திமுக வெளிநடப்பு

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு மக்கள் நலத்திட்டங்கள் எதையும் நிறைவேற்றாதது, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவைகளை கண்டித்துத திமுக-காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் முழு…

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு மக்கள் நலத்திட்டங்கள் எதையும் நிறைவேற்றாதது, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவைகளை கண்டித்துத திமுக-காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை, அதற்கு பதிலாக 5 மாதத்துக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது.

கூட்டத்தொடரை  உரையாற்றி தொடங்கி வைக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சட்டப்பேரவை வந்தார். அப்போது துணைநிலை ஆளுநருக்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டு, சபாநாயகர் செல்வம், சட்டபேரவை செயலர் முனிசாமி துணைநிலை ஆளுநரை பேரவை மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். கூட்டத்தொடரை துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையாற்றி தொடங்கி வைத்தார்.

ஆளுநர் உரையை கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர் கட்சி தலைவர் சிவா தலைமையில் கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வருகை தந்திருந்தனர்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு மக்கள் நலத்திட்டங்கள் எதையும் நிறைவேற்றாதது, வேலைவாய்ப்பின்மை, மின்துறை தனியார் மயம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகளை கண்டித்து பேரவையில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக – காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.