முக்கியச் செய்திகள் குற்றம்

கேரட் கழுவும் தொட்டியில் உயிரிழந்த நிலையில் வடநாட்டுப் பணியாளர்; போலீஸ் விசாரணை

உதகை அருகே கேத்தி பாலடா பகுதியில் வடநாட்டுப் பணியாளர் கேரட் கழுவுவதற்கு நீர் நிரப்பி வைக்கும் தொட்டியில் இன்று காலை பிணமாகக் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தோட்ட தொழிலில் தேயிலைக்கு அடுத்தபடியாக அதிகளவில் மலைக்காய் கறிகளான கேரட் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்காகச் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி,பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதால் இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் இரவு, பகல் என பணியாற்றி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் கேத்தி பாலடா பகுதியில் உலகப்பன் என்பவருக்குச் சொந்த மான SBA காரட் கழுவும் இயந்திர வளாக கிணற்றில், அங்கு வேலை செய்த பிரிய ரஞ்சன் மிஸ்ரா (வயது 33) என்பவரது உடல் பிரேதமாகக் கண்டெடுக்கப் பட்டுள்ளது. கேத்தி போலீசார் மேற் கொண்ட விசாரணையில் இரண்டு நாட்களாக பிரியரஞ்சன்மிஸ்ரா காணாமல் போனது தெரிய வந்தது. இவர் பீகார் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 8 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறார். இவருக்குக் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. மனைவி பூர்வீக கிராமத்தில் வசித்து வருகிறார். இன்று அங்கு இருக்கும் கேரட் கழுவுவதற்கு நீர் நிரப்பி வைக்கும் தொட்டியில் பிணமாகக் கிடந்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘‘ஏன் இந்த பாரபட்சம் நீதிமன்றமே?’ – சிபிஎம் மாநிலச் செயலாளர் கேள்வி

இதுகுறித்து கேத்தி பகுதி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த கேத்தி காவல் துறையினர் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வடமாநில நபர் இறந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram