புதுச்சேரி | நாட்டு வெடிகுண்டு, கத்தியுடன் பள்ளிக்கு வந்த மாணவர் – காவல்துறை அதிரடி நடவடிக்கை!

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறைக்கு நாட்டு வெடிகுண்டு கொண்டு வந்து மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

புதுச்சேரி மூலக்குளம் பகுதிகள் இயங்கி வரும் தனியார் பள்ளியில் +1 படிக்கும் மாணவர்கள் இரு பிரிவினராக செயல்பட்டு வந்தனர். இதில் ஏற்பட்ட முன்
விரோதம் காரணமாக ஒரு தரப்பைச் சார்ந்த மாணவர் நேற்று முன்தினம் (ஜன. 22) கத்தி மற்றும் 6 நாட்டு வெடிகுண்டுகளை புத்தகப் பையில் வைத்து பள்ளிக்கு
எடுத்து வந்து எதிர்தரப்பைச் சார்ந்த மாணவர் ஒருவரின் கையில் கத்தியால்
தாக்கியுள்ளார்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனை ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் மாணவனிடம் இருந்து கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டது. சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் தரப்பிலோ, பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் தரப்பிலோ எந்த புகாரும் அளிக்கவில்லை.

தொடர்ந்து ரெட்டியார்பாளையம் போலீசார் தாமாக முன்வந்து கத்தியால் வெட்டியது, வெடிகுண்டு வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து மாணவனை கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு தனியார் பள்ளிக்கு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.