முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க மத்திய அரசுக்கு பொதுப்பணித்துறை கடிதம்!

கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க வேண்டும்  என மத்திய அரசுக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாக சென்னை மெரினா கடலில் 134 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ரூ.81 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த பேனா நினைவுச் சின்னத்தை சென்றடைய கடற்கரையில் 290 மீட்டர் நீளத்திற்கும் கடலுக்குள் 360 மீட்டர் நீளத்திற்கும் பாலம் அமைக்கப்பட உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பேனா நினைவுச் சின்னத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை சமர்ப்பித்தது. விரைவில் மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இத்திட்டத்திற்கு கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கவுள்ளது.

தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பொதுமக்கள் கருத்து கேட்பு உட்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்ததோடு இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்கவும் அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவாகவும், 12 பேர் எதிராகவும் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்காக பொதுப்பணித்துறை தயாரித்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பரிசீலித்த, தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையம் அதற்கு ஒப்புதல் வழங்கி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை சார்பில் பேனா நினைவுச் சின்னத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

பெரியார் சிலை உடைப்பு: முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும்! – கி.வீரமணி கோரிக்கை

Arivazhagan Chinnasamy

சேலத்தில் அச்சுக்கலை வரலாற்று கண்காட்சி

EZHILARASAN D

கார்த்தி குரலில் வெளியான ‘ஏறுமயிலேறி’ பாடல்; வைரலாகும் ‘சர்தார்’ லிரிக்கல் வீடியோ

EZHILARASAN D