விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில் உடைந்து
விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம்
அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி கீழத்தெரு பகுதியில், மின்கம்பமானது பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்து உள்ளது. மேலும், கம்பிகள் முழுவதும் வெளியில் தெரியும் நிலையில் காணப்படுகிறது. காற்று வீசும் போது இந்த மின்கம்பம் ஆடுவதாகும் , எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளதாகும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும், இதனால் பெரும் விபத்து ஏற்படுவதற்குள் உடனே இந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டுமெனவும், அதற்கு பதிலாக புதிய மின்கம்பம் அமைக்க வேண்டுமெனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
— கு.பாலமுருகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: