ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று எலக்ட்ரிக் டிராக்டரை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.
அனைத்து துறைகளின் மேம்பாட்டிலும் தொழில்நுட்பம் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது. மனித வேலைகளை எளிதாக்குவதற்கு தொழில்நுட்பம் அதிகம் உதவுகிறது. அந்தவகையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விவசாயத்தை மேலும் எளிதாக்கும் வகையில் Monarch Tractor என்ற எலக்ட்ரிக் டிராக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிராக்டர் 40 குதிரைத்திறன் கொண்டது. ஆனால் இதனை 70 குதிரைத்திறன் வரை அதிகரிக்க முடியும். பேட்டரியை மாற்றும் வசதியும் இந்த டிராக்டரில் காணப்படுகிறது. உங்களுக்கு தேவையான வேகத்தில் இதனை நீங்கள் இயக்கிக் கொள்ளலாம். இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், ஓட்டுநர் இல்லாமல் கூட இதனை இயக்க முடியும். இதில் சென்சார் மற்றும் கேமரா வசதியும் காணப்படுகிறது.
வயலில் பூச்சி மருந்து தெளிப்பதற்கும் இந்த டிராக்டரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுபோன்ற தொழில்நுட்பங்களால் விவசாயத்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.







