பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மை குற்றவாளிகளை சிபிஐ கைது செய்ய வலியுறுத்தி திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றறது.
பொள்ளாச்சியில் பாலியல் வழக்கு தொடர்பாக, கடந்த வாரம் அதிமுக நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும் மேலும் உண்மை குற்றவாளிகளை அதிமுக அரசு பாதுகாப்பதாகக் கூறி பொள்ளாச்சி காந்தி சிலை அருகே திமுக மகளிரணி சார்பில், அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய கனிமொழி பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.







