“மத்திய அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்” – தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அறிவிப்பு!

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகையை கண்டித்து வருகிற 28 அன்று முற்றுகை மற்றும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

"Protest against the Union Minister" - Announcement on behalf of the Tamil Nadu Congress!

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியைத் தர மறுக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வருகிற பிப். 25 ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகையை ஒட்டி அன்று கருப்புக் கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) தள பதிவில்,

“மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்றும் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய 2152 கோடி ரூபாய் இன்று வரை ஒதுக்காமலும், தமிழகத்தையும், தமிழக மாணவர்கள் எதிர்காலத்தையும் சிதைக்கும், மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகையை கண்டித்து வருகிற 28 அன்று முற்றுகை மற்றும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.