ஆளுநரை கண்டித்து கருப்பு முண்டாசு அணிந்து போராட்டம்…

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியா சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசி வரும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து இன்று…

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியா சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசி வரும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து இன்று சென்னையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியா சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், திராவிட விடுதலை கழக தலைமை நிலைய செயலாளர் தபசி. குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வேணுகோபால், பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் மகேஷ், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரன், தமிழர் விடுதலை கழக தலைவர் சுந்தரமூர்த்தி, மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அனைத்து தலைவர்களும் கறுப்பு துணியால் முண்டாசு கட்டி எதிர்ப்பை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.