மதுரையில் டிஎம் சௌந்தரராஜன் சிலை; திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், பின்னணிப் பாடகர் கலைமாமணி T. M. சௌந்தரராஜன் அவர்களின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மறைந்த தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்…

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், பின்னணிப் பாடகர் கலைமாமணி T. M. சௌந்தரராஜன் அவர்களின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மறைந்த தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் சிலை திறப்பு விழாவில் தலைமை வகிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். மதுரை முனிச்சாலை சந்திப்பில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் நடைபெறும் இந்த விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சாமிநாதன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன் வசந்த், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருக்காக பின்னணி குரலில் பாடியவர். தமிழ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர். கடந்த 2013 ஆம் ஆண்டு தனது 91ஆம் வயதில் காலமானார். இச்சிலை ரூ.50 லட்சம் செலவில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.