மத்திய பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி நடைபெற்றபோது 30 பேர் கிணற்றில் விழுந்த நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 50 அடி ஆழம் 20 அடி நீர்மட்டம் உள்ள கிணற்றில் சிறுவன் தவறி விழுந்துள்ளார். சிறுவனை மீட்கும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கிணற்றின் சுற்று சுவர் திடீரென இடிந்து விழுந்தது. எதிர்பாராத இந்த சம்பவத்தால் மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 30 கிராம மக்கள் தவறி கிணற்றுக்குள் விழுந்தனர். அதில், 3 பேர் உயிரிழந்தனர், 19 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருவதாகவும் மீட்பு பணிகள் தீவிரபடுத்தபட்டுள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சமும் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு 50,000 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.







