தேசிய விருது பெற்ற பிரபல நடிகை உயிரிழப்பு

தேசிய விருது பெற்ற பிரபல இந்தி நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 75. சில நாட்களாக மூளை பக்கவாதத்தால் அவதிப்பட்டு வந்த சுரேகா சிக்ரி, மாரடைப்பு காரணமாக இன்று காலை…

தேசிய விருது பெற்ற பிரபல இந்தி நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 75.

சில நாட்களாக மூளை பக்கவாதத்தால் அவதிப்பட்டு வந்த சுரேகா சிக்ரி, மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.
மூன்று தேசிய விருதுகளை பெற்றுள்ள சுரேகா சிக்ரி, டமாஸ், மம்மோ, சுபெய்தா, பதாய் ஹோ உள்பட பல திரைப்படங்களின் மூலம் பெரிதும் பேசப்பட்டார்.

பதாய் ஹோ திரைப்படத்தில் பாட்டியாக நடித்திருந்தார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாட்கள் சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர், தனது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவர் மறைவுக்கு இந்தி திரைபிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.