முக்கியச் செய்திகள் தமிழகம்

படிப்படியாக பத்திரப்பதிவுமுறை எளிமைப்படுத்தப்படும் – அமைச்சர் மூர்த்தி

முறைகேடான பத்திரப்பதிவுகளை தடுக்க எழுத்தர் மற்றும் வழக்கறிஞர்களில் உரிம எண்களை 9ம் தேதி முதல் பதிவு செய்யும் நடைமுறை அமுலுக்கு வருவதாக பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, கொரோனா பெருந்தொற்று மூன்றாவது அலையை தடுக்க மதுரை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக கூறினார். பத்திரப்பதிவில் முறைகேடுகளைத் தடுக்க சார்பதிவாளர்கள் மீது மட்டுமின்றி எழுத்தர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எழுத்தர்கள் பதிவு உரிம எண்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறினார். பத்திரம் எழுதும் வழக்கறிஞர்கள் பார்கவுன்சிலில் கொடுத்துள்ள எண்களையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனால் முறைகேடான பத்திரப் பதிவுகள் குறையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். படிப்படியாக பத்திரப்பதிவு முறையானது எளிமைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி உறுதி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதிதாக 1,544 பேருக்கு கொரோனா தொற்று

G SaravanaKumar

சீனாவை கட்டுப்படுத்த பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு உருவாக்கம்

Mohan Dass

கொரோனா: மரத்தில் கட்டில் கட்டி தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்!

Halley Karthik