முக்கியச் செய்திகள் சினிமா

இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா மேல்முறையீடு

இந்தியன்-2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்க க்கோரி லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்க க்கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி லைக்காவின் மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்தநிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லைகா தரப்பில், தனி நீதிபதியின் உத்தரவு நகல் இல்லாமல் மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் எனக் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, லைகா நிறுவனத்தின் மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டது.

Advertisement:
SHARE

Related posts

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு திமுக வலியுறுத்தல்!

Gayathri Venkatesan

25% குறைந்த சிமெண்ட் உற்பத்தி!

புதிய வண்ணங்களில் ராயல் என்ஃபீல்டு அறிமுகம்!

எல்.ரேணுகாதேவி