குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகையாக மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டத்துக்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகையாக மாதம் தோறும் 1000 ரூபாய் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சி அமைந்து 100 நாட்களை எட்ட உள்ள நிலையில் 1000 ரூபாய் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கருணாநிதி நினைவிடத்தில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார். இதனைத் தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்குச் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர்க்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை கொடுக்கும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







