தமிழ்நாடு காவல்துறையில் ஏடிஜிபி ஆக உள்ள உள்ள 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் ஏடிஜிபிக்களாக பணியாற்றும் ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் ஆகியோர் டிஜிபி-யாக பதவி உயர்வு பெறும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்துள்ளது. டிஜிபியாக பதவி உயர்வு பெற உள்ள இந்த அதிகாரிகள் அனைவருமே 1992-ம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்ச்சி பெற்றவர்கள்.
இதையும் படியுங்கள் : இஷான் கிஷனின் அதிரடி வீண் – 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது லக்னோ!!
அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னர் கடந்த சனிக்கிழமை உதயச்சந்திரன் உள்ளிட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று 16 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 32 ஐஏஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.







