முக்கியச் செய்திகள் தமிழகம்

தாய்மொழி கல்வியை ஊக்குவிப்பது தான் புதிய தேசிய கல்வி கொள்கை- எல்.முருகன்

தாய்மொழி கல்வியை ஊக்குவிப்பது தான் புதிய தேசிய கல்விக் கொள்கை. சர்வதேச
அளவில் போட்டி போடவே தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய வித்யார்த்தி பரிஷ்த் அமைப்பின் தென் தமிழக 28வது மாநில மாநாடு
நெல்லையில் நேற்று தொடங்கியது. 2வது நாளான இன்று மாநாட்டில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு இளம் சாதனையாளருக்கான விருதை பரமக்குடியைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த மாநாட்டில் பேசிய மத்தியமைச்சர் எல்.முருகன், எந்த பாகுபாடும் இல்லாமல், கட்டமைப்போடு நான் இருப்பதற்கு ஏ.பி.வி.பி. அமைப்பு தான் காரணம். இந்த அமைப்பில் இருந்து வந்தவர்கள் இந்தியாவை ஆண்டு வருகிறோம். இந்தியாவில் நடந்து வரும் 8 ஆண்டு ஆட்சியின் சாதனையை சொல்ல 8 ஆண்டுகள் வேண்டும். வரலாற்றில் முதல் முறையாக நமது பிரதமர் தலைமையில் ஜி 20 மாநாடு இந்தியாவில் நடக்கிறது.

உலக நாடுகள் நமது தேசத்தை உற்று நோக்குகிறார்கள். 1998ம் ஆண்டு பம்பாயில் நடந்த ஏபிவிபி தேசிய செயற்குழுவில் அன்றைய தினம் பிரதமர் வாஜ்பாய், தேசிய ஆலோசகர் அப்துல் கலாம், உயர் பதவியில் இருப்பவர் மற்றும் மாணவர்கள் என பாகுபாடு இன்றி கலந்து கொண்டனர். அவர்கள் ஆற்றிய உரையை ஹிந்தி தெரியாமல் சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தி கற்றுக் கொள்ளாததற்கு வருத்தம் அடைந்தேன்.இந்திய நாடு சுயசார்பு பாரதத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிறது. உலகின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. 8 ஆண்டுகளில் இங்கிலாந்தை பின் தள்ளிவிட்டு 5வது இடத்திற்கு பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறி உள்ளது. சுயசார்பு பாரதம் மேக் இன் இந்தியா மூலம் இந்த இடத்தை இந்தியா அடைந்துள்ளது. 320 பாதுகாப்புத் துறையில் நமக்கான தேவையை நாமே பூர்த்தி செய்யும் அளவிற்கு பாரதத்தின் மூலம் பல்வேறு தயாரிப்புகள் செய்து வருகிறோம்.

உலகத்தில் இந்தியாவில் மட்டுமே 80 ஆயிரம் புத்தகத் தொழில் நிறுவனங்கள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. 2020ல் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வந்தோம். பல்கலைக்கழக பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினரிடம் கலந்து ஆலோசித்த பின்னர் தான் தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டது. தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் விதம் தான் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. 2047ல் நாடு 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது உலகத்திற்கு வழிகாட்டியாகவும், வல்லரசாகவும் இந்தியா இருக்கும் என அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஓபிஎஸ் – ஈபிஎஸ் சந்திப்பு!

சென்னையில் சாக்கடை பள்ளங்களை மூட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

EZHILARASAN D

குஜராத்தில் மழை: 14 பேர் பலி; 31,000 பேர் மீட்பு

Web Editor