முக்கியச் செய்திகள்

இணையத்தில் வைரலாகும் ‘ப்ராஃபி’ காபி

‘ப்ராஃபி’ காபி தற்போது உலகம் முழுவதும் இணையத்தில் வைரலாகிறது.

கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீட்டிலேயே நமது நேரத்தை செலவழித்து வந்தோம். அந்த சமயத்தில் இணையம் முழுவதும் வைரலானதுதான் டல்கோனா காபி. அந்த சமயத்தில் இதுவரை நீங்கள் டல்கோனா காபியை முயற்சிக்காவிட்டால் அதை முயற்சித்து பார்க்க வேண்டும் என இணையத்தில் பலரும் டல்கோனா காபி தயாரித்து போஸ்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது புதிதாக ‘ப்ராஃபி’ என பெயரிடப்பட்ட காபி இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலில் இதைப் பற்றி டிக்டாக்கில் பலர் பதிவிட்டு வந்தனர். இதையடுத்து இந்த காபி தற்போது இன்ஸ்டாகிராமிலும் #proteincoffee என்ற ஹேஷ்டேக்கில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. புரோஃபி என்பது அடிப்படையில் புரோட்டின் ஷேக் மற்றும் காபி கலந்த ஒரு பானமாகும்.

புரோட்டின் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. இதனால் ஊட்டச்சத்து நிபுணர்கள் அன்றைய முதல் உணவில் புரதத்தை சேர்க்க பரிந்துரைக்கின்றனர்.

Advertisement:

Related posts

உத்திரமேரூர் கோயிலில் தோண்டும் போது கிடைத்த தங்கப் புதையல்!

Jayapriya

வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும்: முதல்வர்!

தமிழக முதல்வர்களின் முக்கிய கையெழுத்துகள்!