முக்கியச் செய்திகள் தமிழகம்

தேர்வில் சினிமா பாடல் எழுதிய மாணவன்; ஆசிரியர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை

தேர்வில் சினிமா பாடல் எழுதியதைக் கண்டித்ததால், பள்ளி மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த, ஒட்டத்தெரு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் கார்த்திக். இவர் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் கணிதப்பிரிவில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், 12ம் வகுப்பிற்கான தாவரவியல் தேர்வை ஆசிரியர் வைத்துள்ளார். தெரிந்த கேள்விகளுக்கு பதில் எழுதிவிட்டு பின்னர் தெரியாத கேள்விகளுக்கு சினிமா பாடலை பதிலாக எழுதியுள்ளார் கார்த்திக். தேர்வு முடிந்து விடை தாளை திருத்தும்போது மாணவரின் பாடலை அனைத்து மாணவர்கள் முன்பு படித்து காட்டி கிண்டல் செய்துள்ளார் ஆசிரியர். அத்துடன் அவ்வழியே வந்த வேதியியல் ஆசிரியரிடமும் காட்டி கிண்டல் செய்துள்ளார்.

மேலும் பெற்றோரை அழைத்து கொண்டு பள்ளிக்கு வருமாறு கார்த்திக்கை திட்டி ஆசிரியர் பள்ளியை விட்டு அனுப்பியுள்ளார். அழுதுக்கொண்டே பள்ளியை விட்டு வெளியேறிய அவர் வீட்டிற்கு சென்று தனது குடும்பத்தினரிடையே நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். தந்தை வந்ததும் தெரிவித்து பள்ளிக்கு சென்று பேசிக்கொள்ளலாம் என தாயார் சமாதானப்படுத்தியுள்ளார். ஆனால், அச்சம்பவத்தை நினைத்து மிகவும் வருத்தத்தில் இருந்த கார்த்திக் நேற்று இரவு அனைவரும் தூங்கிய பிறகு தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இச்சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Related posts

ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Jayapriya

அதி வேகமாக வந்த லாரியால் நிகழ்ந்த கோர விபத்து – 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

Nandhakumar

விவசாயிகள் போராட்டம்; கனடா பிரதமரின் கருத்துக்கு மத்திய அரசு கண்டனம்!

Dhamotharan