செப்டம்பர் முதல் சீனாவில் தொழில்முறை டென்னிஸ் தொடர் – WTA அறிவிப்பு

16 மாதங்களுக்கு பிறகு, வரும் செப்டம்பர் மாதம் முதல் சீனாவில் தொழில்முறை டென்னிஸ் தொடர்கள் நடைபெறும் என உலக மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபனில் பட்டங்களை வென்ற முன்னாள்…

16 மாதங்களுக்கு பிறகு, வரும் செப்டம்பர் மாதம் முதல் சீனாவில் தொழில்முறை
டென்னிஸ் தொடர்கள் நடைபெறும் என உலக மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபனில் பட்டங்களை வென்ற முன்னாள் முதல் தரவரிசை
இரட்டையர் வீராங்கனை பெங் ஷுவாய், சீனாவின் அதிகாரமாக்கத் தலைவர்களில் ஒருவரான ஜாங் கயோலி மீது கடந்த 2021 இல் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தது. இந்நிலையில், அதன் பின் வீராங்கனை காணாமல் போனதாக ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, அவரது மற்றும் மற்ற வீராங்கனைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட பெங் ஷுவாய், தனது குடும்பத்துடன்
பீஜிங்கில் இருந்து வருகிறார் என தகவல் வெளியாகி இருந்தது. எனவே நீண்ட நாட்கள்
நிடித்த தொழில்முறை டென்னிஸ் தொடர்கள் மீதான, விளக்கிக் கொள்வதாகவும், பெங்
ஷுவாய் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களிடம் உலக மகளிர்
டென்னிஸ் சங்கம் அவ்வப்போது தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் முதல் சீனாவில் மீண்டும் தொழில்முறை மகளிர் டென்னிஸ்
தொடர்கள் நடத்த உலக மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு சீனாவுக்கு அனுமதி
வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.