உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தகோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவதுடன் விசு கனி தரிசனமும் செய்துவருகின்றனர்.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 4-00 மணிக்குக் கோவில் கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து 04-30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 05-00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து சுவாமிக்குத் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன . மேலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோவில் உள்பிரகாரத்தில் கனி காணும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நிலைக்கண்ணாடி வைத்து அதில் அப்பிள் , மாதுளை, ஆரஞ்சு, மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட பலவகையான பழங்கள் தட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிருந்தும் வந்திருந்த பக்தர்கள் அதிகாலையிலே
கடலில் புனித நீராடி விசுக்கனி தரிசனம் செய்து பின்னர் நீண்ட வரிசையில்
காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.







