டி20 உலகக் கோப்பை வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை அறிவிப்பு

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் 13 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும்…

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் 13 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக ஐசிசி அறிவித்துள்ளது.

ஐசிசி உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக 45 கோடியே 57 லட்சம் ரூபாயை சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பு (ஐசிசி) அறிவித்துள்ளது.

குறிப்பாக சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 13 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 6 கோடியே 50 லட்சம் ரூபாயும், அரையிறுதிப் போட்டியில் வெளியேறும் அணிகளுக்கு தலா 3 கோடியே 25 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

அதுமட்டுமின்றி சூப்பர் 12 சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு ஒட்டுமொத்தமாக 9 கோடியே 77 லட்சம் ரூபாயும், சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ஒட்டுமொத்தமாக 4 கோடியே 56 லட்சம் ரூபாயும், முதல் சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு 3 கோடியே 90 லட்சமும், வெளியேறும் அணிகளுக்கு 1 கோடியே 30 லட்சம் என மொத்த பரிசுத் தொகையாக 45 கோடியே 57 லட்சம் ரூபாயை சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பு (ஐசிசி) அறிவித்துள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.