33.9 C
Chennai
September 26, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரியங்கா காந்தி ஆறுதல்!

இமாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் பொதுக் செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் கூறினார். 

கடந்த ஜூலை மாதத்தில் குலு மற்றும் மண்டி மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தியது. ஜூன் 24-ல் தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை பெய்த பருவமழை இமாச்சலில் ரூ.8,679 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாநிலத்தில் மொத்தம் 165 நிலச்சரிவுகள் மற்றும் 72 திடீர் வெள்ளப்பெருக்கும் பதிவாகியுள்ளன. நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா நாளை 2 நாள் பயணமாக இமாச்சலப் பிரதேசம் சென்றுள்ளார்.பிரியங்கா இன்று காலை குலுவில் உள்ள பூந்தர் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை மலர்க்கொத்து அளித்து வரவேற்றனர். பிரியங்காவுடன் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் விக்மாதித்ய சிங் ஆகியோர் உடனிருந்தனர். பிரியங்கா சிம்லா மற்றும் சோலன் மாவட்டங்களுக்கும் ஆய்வு செய்கிறார்.

மேலும் ஆப்பிள் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் பெட்டிகளின் விலைகள் குறித்து காங்கிரஸ் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் விவசாயிகளுடன் பேசினார். அதானி குழுமம் கொள்முதல் விலையை வெளியிட்ட பிறகு, இமாச்சல பிரதேசத்தில் ஆப்பிள் பெட்டிகள் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு விற்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்து குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

“சூப்பர் முதலமைச்சராக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செயல்படுகிறார்”

Arivazhagan Chinnasamy

முழு ஊரடங்கு : வெறிச்சோடிய சாலைகள்!

EZHILARASAN D

திடீர் மழை: இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை!

G SaravanaKumar