சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் 10ம் தேதி தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதனால் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் ஆகியோர் வரும் 10 ஆம் தேதி தமிழகம் வருகின்றனர். 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர், டிஜிபி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.அது மட்டுமில்லாமல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும், தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.