முக்கியச் செய்திகள் இந்தியா

வங்கிகள் தனியார்மயம்; திருமாவளவன் எதிர்ப்பு

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கக்கூடாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் எம்.பி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்திருந்த பட்ஜெட்டில் பல திட்டங்களை அறிவித்திருந்தது. இதற்கான நிதி பற்றாக்குறையை பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதன் மூலம் பெற முடிவெடுத்தது. இந்நிலையில் தனியார்மயமாகும் வங்கிகள் குறித்த பட்டியலை நிதி ஆயோக்கிடம் வழங்கியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்டரல் பேங்க் ஆஃப் உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன.

இதனைத் தொடர்ந்து தற்போது விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் எம்.பி ஆகியோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என வலியுறுத்தி கடிதம் வழங்கியுள்ளனர்.

1939ல் தொடங்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏறத்தாழ 3,500 கிளைகளுடன் இந்தியா முழுவதும் இயங்கி வருகின்றது. மத்திய அரசின் இந்த முடிவால் அதன் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும்: பிரதமர் மோடி

எல்.ரேணுகாதேவி

ராஜ் குந்த்ராவின் ஆபாசப் பட விவகாரம்.. பிரபல தமிழ் நடிகை விளக்கம்!

Gayathri Venkatesan

ஆண் குழந்தைக்கு அம்மாவானார் பாடகி ஸ்ரேயா கோஷல்!

Halley karthi