பாம்பன் கடல் பகுதியில் இடுப்பில் கயிற்றுடன் மிதந்த உடலை மீட்ட கடலோர காவல் படை போலீசார் கொலையா உயிரிழப்பு என விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாம்பன் கடல் பகுதியில் இடுப்பில் கயிறு கட்டியபடி மிதந்து சென்ற உடலை மரைன் போலீசார் மீட்டு கொலையா ?உயிரிழப்பு ?என விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பன் வடக்கு கடல் பகுதியில் இருந்து தெற்கு கடல் பகுதி வழியாக அடையாளம் தெரியாத அரக்கு நிறத்தில் முழுக்கால் சட்டையும் ஊதா நிறத்தில் முழுக்கால் பேண்ட் அணிந்திருந்த ஆணின் உடலில் இடுப்பில் கயிறு கட்டியப்படி மிதந்து வருவதாக மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து போலீசார் உடலை மீட்டு பாம்பன் தெற்குவாடி கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்து உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து இறந்தவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று இடிப்பில் கயிறு கட்டி இருப்பதால் கொலை செய்யப்பட்டு கடலில் தூக்கிப் போடப்பட்டரா? அல்லது உயிரிழப்பு செய்து கொண்டாரா? என விசாரணையை துவங்கியுள்ளனர் மேலும் பாம்பன் பாலத்தில் இருந்து இடுப்பில் கல்லை கட்டிக்ககொண்டு குதித்து உயிரிழப்பு செய்து இருப்பாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இடுப்பில் கயிறு கட்டியவாறு உடல் மிதந்து சென்றது மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.