தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு 3 கோடி ரூபாய் அபராதம்

மதுரையில் மேம்பாலம் இடிந்துவிழுந்த விபத்திற்கு காரணமான தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. 545 கோடி ரூபாய் மதிப்பில், மதுரை தல்லாகுளம் முதல் செட்டிகுளம்…

மதுரையில் மேம்பாலம் இடிந்துவிழுந்த விபத்திற்கு காரணமான தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.

545 கோடி ரூபாய் மதிப்பில், மதுரை தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட மேம்பாலம், 2022 ஏப்ரல் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மேம்பாலத்தின் அருகே இருந்த இணைப்பு பாலத்தின் ஒரு பகுதி, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், ஹைட்ராலிக் இயந்திர கோளாறால், திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது. இதில், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.

மேம்பால விபத்து தொடர்பாக தனியார் நிறுவன திட்ட பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின், கட்டுமானப்பணிகள் பொறியாளர் சத்தியேந்தர் வர்மா உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இவ்விபத்து தொடர்பாக, ஆய்வு மேற்கொண்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், விபத்துக்கு காரணமான ஒப்பந்த நிறுவனத்திற்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது எனவும், கட்டுமான ஆலோசனை நிறுவனத்திற்கு 40 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

மேலும், புதிய மேம்பால கட்டுமான பணிகள் 80 சதவிகிதம் நிறைவடைந்து உள்ளதாகவும், நடப்பாண்டில் அக்டோபர் மாதம் பணிகள் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் எனவும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.