சேலம் புதிய பேருந்து நிலையம் மற்றும் லீபஜார் அருகே வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி மற்றும் லைன் மேடு பகுதியைச் சேர்ந்த சாதிக் பாஷா ஆகிய இருவரும் புதிய பேருந்து நிலையம் மற்றும் லீ பஜார் அருகே சாலையில் செல்லும் நபர்களிடம் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து அவர்களிடமிருந்து விலை உயர்ந்த செல்போன்களையும் பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக பள்ளப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது, இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட பெரியசாமி, சாதிக் பாஷாவை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
அண்மைச் செய்தி: ‘சென்னையில் 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது’
இந்த சம்பவங்களை அடுத்து மக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான பகுதியில் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருவரும் நடந்து கொண்டதற்காக சேலம் மாநகர ஆணையாளர் நஜ்முல் ஹோதா உத்தரவிட்டதனடிப்படையில், இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








