பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கியுள்ள ப்ராஜெக்ட் கே, திரைப்படம் தெலுங்கு திரையுலகில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் தற்போதைய பான்-இந்திய ஸ்டாராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் பாகுபலி புகழ் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடிக்க, பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதையின் நாயகியாக தோன்றி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தயாரிப்பாளர்கள் தொடங்கியுள்ளனர்.
‘ப்ராஜெக்ட்-கே’ படத்தின் தலைப்பு ஜூலை 20 அன்று சர்வதேச அரங்கில் அதாவது சான் டீகோ காமிக்-கான் நிகழ்வில் பிரமாண்டமாக வெளியிட தயாராகி வருகிறது. சமீபத்தில், பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் டீஸர் வெளியான நிலையில் ‘ப்ராஜெக்ட்-கே’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஜூலை 21-ம் தேதி வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் முழு உற்சாகத்தில் உள்ளனர்.
https://twitter.com/VyjayanthiFilms/status/1681604861534806016
இந்நிலையில், இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த முதல்பார்வை போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.







