குஜராத்தில் நாளை நடைபெறவுள்ள இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியை இருநாட்டு பிரதமர்களும் காணவுள்ளனர்.
பாா்டா்-கவாஸ்கா் கோப்பைக்கான இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரில், முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 4வது டெஸ்ட் போட்டி நாளை காலை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: சென்னை சவுகார்பேட்டையில் களைகட்டிய ஹோலி பண்டிகை!
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கடைசி டெஸ்ட்டின் முதல் நாள் போட்டியை நேரில் பார்க்கவுள்ளனர். இதனால், மைதானம் முழுவதும் மத்திய பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு 2,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த போட்டியைக் காண ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிரிக்கெட் ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பார்வையாளர்கள் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
-ம.பவித்ரா