தென்னிந்திய மக்களின் கலை, கலாச்சாரத்தை அறிய சைக்கிள் பயணம் செய்யும் வெளிநாட்டினர்!

தென்னிந்திய மக்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள சைக்கிளில் பயணம் செய்யும் வெளிநாட்டினர். தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அறிந்து கொள்வதில் எப்போதும் வெளிநாட்டினர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். நம்முடைய…

தென்னிந்திய மக்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள சைக்கிளில் பயணம் செய்யும் வெளிநாட்டினர்.

தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அறிந்து கொள்வதில் எப்போதும் வெளிநாட்டினர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். நம்முடைய கலைகளான சிலம்பம், பரதநாட்டியம் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்வதில் வெளிநாட்டினர் எப்போதும் ஆர்வம் காட்டுவர்.

அந்த வகையில் தற்போது தமிழ்நாடு மற்றும் கேரள மக்களின் கலை, கலாச்சாரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளும் வகையில் வெளிநாடுகளை சேர்ந்த ஆறு பேர் கடந்த வாரம் புதுச்சேரியில் இருந்து கொச்சின் நோக்கி சைக்கிளில் பயணம் செய்ய தொடங்கினர்.

இவர்கள் புதுச்சேரியில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து விழுப்புரம்,
கடலூர், கும்பகோணம், வழியாக மதுரை சென்று அங்கிருந்து கொச்சின் செல்ல
திட்டமிட்டுள்ளனர்.

இன்று காலை இவர்கள் கும்பகோணம் வழியாக சைக்கிளில் மதுரை நோக்கி பயணம்
மேற்கொண்டனர். வெளிநாட்டைச் சேர்ந்த இந்த ஆறு பேரும் அதிகாலையிலும் மாலை நேரங்களிலும் சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனர். நம்பகுதியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பகல் பொழுதில் சைக்கிளில் பயணம் செய்யாமல் ஓய்வு எடுக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.