‘எலான் மஸ்கின் குழந்தைகளுடன் பிரதமர் மோடி’.. இணையத்தில் வைரலாகும் பழைய புகைப்படம்!

பிரதமர் நரேந்திர மோடி எலான் மஸ்கின் குழந்தைகளுடன் இருக்கும் பழைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதற்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.  டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், கடந்த 2022-ம்…

பிரதமர் நரேந்திர மோடி எலான் மஸ்கின் குழந்தைகளுடன் இருக்கும் பழைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதற்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். 

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4,400 கோடி டாலருக்கு (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) ட்விட்டரை வாங்கினார். கடந்த அக். 27-ம் தேதி இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து எலான் மஸ்க் வசம் ட்விட்டர் வந்தது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்தே தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தன.  அவ்வப்போது அவர் எக்ஸ் தளத்தில் பதிவிடும் கருத்துகள் வைரலாவது வழக்கம்.  எலான் மஸ்க் பயனர்களின் கருத்துக்கும் பதிலளிப்பார்.

இந்த சூழலில் எலான் மஸ்க் மற்றும் அவரது குழந்தைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் பழைய புகைப்படத்தை பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.  இந்த புகைப்படத்தில் பிரதமர் மோடி பிரதமர் மோடி சிரித்தபடி ஒரு குழந்தையுடன் கை குலுக்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.  மற்றொரு குழந்தை அருகில் நின்று பிரதமர் மோடியை பார்த்துக் கொண்டு இருக்கிறது.  எலான் மஸ்க் அருகில் நின்று கொண்டிருக்கிறார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதற்கு பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் எக்ஸின் இன் உரிமையாளரான எலான் மஸ்க்,  தனது மகன்களின் பெயர்களை தெரிவித்து இடுகைக்கு பதிலளித்தார்.  அவர் “டாமியன் & காய்” என்று தனது மகன்களின் பெயரை தெரிவித்தார். இந்த இடுகை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன், எலான் மஸ்க்கின் பதில் கிட்டத்தட்ட 2,700 லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த இடுகைக்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.