பெருந்தலைவர் காமராஜருக்கு பிரதமர் மோடி புகழாரம்!

தனது வாழ்நாளை தேசத்தைக் கட்டமைப்பதற்காக அர்ப்பணித்தவர் காமராஜர் என பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் காமராஜரின் உருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் விஜய் சென்னை காமராஜர் படத்திற்கு பரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ காமராஜரின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறோம். இந்தியாவின் சுதந்திர இயக்கத்தின் தூணாகவும், ஒரு தலைசிறந்த பொது ஆளுமையாகவும் திகழ்ந்த அவர், தனது வாழ்நாளை தேசத்தைக் கட்டமைப்பதற்காக அர்ப்பணித்தார். கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நலிந்தோரின் நலன் போன்ற துறைகளில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.