லிபியா : அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 50 பேர் மாயம்!

வட ஆபிரிக்க நாடான லிபியா அருகே மத்திய தரைக்கடலில் 60 அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

லிபியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் 60 அகதிகளுடன் வந்த படகு டோப்ரூக் அருகே உள்ள பார்டா தீவு பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்படக் குறைந்தது 50 பேர் உயிரிழந்து இருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் விபத்தின் போது படகில் இருந்த 10 பேர் நீந்திச் சென்று அருகில் உள்ள தீவில் கரையேறியுள்ளனர். தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாழ்வாதாரங்களை தேடி மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவிற்கு அகதிகளாக வரும் மக்கள், சிறிய படகில் இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.