இந்திய பிரதமர் மோடி நேற்று முன் தினம் தனது 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை தொடர்ந்து அரசியல், சினிமா என பல்வேறு தரப்பினரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பல்வேறு உலக தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பரிசுகளையும் வழங்கினர். இந்த நிலையில் பிரதமர் மோடி இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் பிறந்த நாள் பரிசாக வழங்கிய கடம்ப மரக்கன்றை தனது அதிகார்வபூர்வ இல்லத்தில் நட்டுள்ளார்.
இது தொடர்பான பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவில்,
”இன்று காலை 7 மணிக்கு லோக் கல்யாண் மார்க்கில் ஒரு கடம்ப மரக்கன்றை நட்டேன், இது இங்கிலந்து மன்னர் மூன்றாம் சார்லஸால் பரிசளிக்கப்பட்டது. அவர்engiland சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர், இது எங்கள் விவாதங்களிலும் இடம்பெறும் ஒரு தலைப்பு”
என்று தெரிவித்துள்ளார்.







